பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
426

240

240. புயலன் றலர்சடை ஏற்றவன்
        தில்லைப் பொருப்பரசி
    பயலன் றனைப்பணி யாதவர்
        போல்மிகு பாவஞ்செய்தேற்
    கயலன் தமியன்அஞ் சொற்றுணை
        வெஞ்சுரம் மாதர்சென்றால்
    இயலன் றெனக்கிற் றிலைமற்று
        வாழி எழிற்புறவே.