241. பாயும் விடையோன் புலியூ ரனையவென் பாவைமுன்னே காயுங் கடத்திடை யாடிக் கடப்பவுங் கண்டுநின்று வாயுந் திறவாய் குழையெழில் வீசவண் டோலுறுத்த நீயும்நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள்குரவே.