பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
428

242

242. சுத்திய பொக்கணத் தென்பணி
        கட்டங்கஞ் சூழ்சடைவெண்
    பொத்திய கோலத்தி னீர்புலி
        யூரம் பலவர்க்குற்ற
    பத்தியர் போலப் பணைத்திறு
        மாந்த பயோதரத்தோர்
    பித்திதற் பின்வர முன்வரு
        மோவொர் பெருந்தகையே.