பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
433

246

246. மின்றொத் திடுகழல் நூபுரம்
        வெள்ளைசெம் பட்டுமின்ன
    ஒன்றொத் திடவுடை யாளொடொன்
        றாம்புலி யூரனென்றே
நன்றொத் தெழிலைத் தொழவுற்
        றனமென்ன தோர்நன்மைதான்
    குன்றத் திடைக்கண் டனமன்னை
        நீசொன்ன கொள்கையரே.