248. சுரும்பிவர் சந்துந் தொடுகடல் முத்தும்வெண் சங்குமெங்கும் விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி யாம்வியன் கங்கையென்னும் பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலமனைய கரும்பன மென்மொழி யாருமந் நீர்மையர் காணுநர்க்கே.