பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
436

249

249. ஆண்டி லெடுத்தவ ராமிவர்
        தாமவ ரல்குவர்போய்த்
    தீண்டி லெடுத்தவர் தீவினை
        தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
    தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ
        டெற்றப் பழம்விழுந்து
    பாண்டி லெடுத்தபஃறாமரை
        கீழும் பழனங்களே.