251. பரம்பயன் தன்னடி யேனுக்குப் பார்விசும் பூடுருவி வரம்பயன் மாலறி யாத்தில்லை வானவன் வானகஞ்சேர் அரம்பையர் தம்மிட மோஅன்றி வேழத்தி னென்புநட்ட குரம்பையர் தம்மிட மோஇடந் தோன்றுமிக் குன்றிடத்தே.