பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
445

255

255. கழிகட் டலைமலை வோன்புலி
        யூர்கரு தாதவர்போல்
    குழிகட் களிறு வெரீஇ அரி
        யாளி குழீஇவழங்காக்
    கழிகட் டிரவின் வரல்கழல்
        கைதொழு தேயிரந்தேன்
    பொழிகட் புயலின் மயிலின்
        துவளு மிவள்பொருட்டே.