261. சுழியா வருபெரு நீர்சென்னி வைத்தென்னைத் தன்தொழும்பில் கழியா அருள்வைத்த சிற்றம் பலவன் கரந்தருமான் விழியா வரும்புரி மென்குழ லாள்திறத் தையமெய்யே பழியாம் பகல்வரின் நீயிர வேதும் பயனில்லையே.