263. தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க நாமா தரிக்க நடம்பயில் வோனைநண் ணாதவரின் வாமாண் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல்கண்டால் தாமா அறிகில ராயினென் னாஞ்சொல்லுந் தன்மைகளே.