264. வல்சியி னெண்கு வளர்புற் றகழமல் கும்மிருள்வாய்ச் செல்வரி தன்றுமன் சிற்றம் பலவரைச் சேரலர்போற் கொல்கரி சீயங் குறுகா வகைபிடி தானிடைச்செல் கல்லத ரென்வந்த வாறென் பவர்ப்பெறிற் கார்மயிலே.