பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
460

266

266. குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும்
        நின்குலத் திற்கும்வந்தோர்
    நிறைவிற்கும் மேதகு நீதிக்கும்
        ஏற்பின்அல் லால்நினையின்
    இறைவிற் குலாவரை யேந்திவண்
        தில்லையன் ஏழ்பொழிலும்
    உறைவிற் குலாநுத லாள்விலை
        யோமெய்ம்மை யோதுநர்க்கே.