பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
464

269

269. கேழே வரையுமில் லோன்புலி
        யூர்ப்பயில் கிள்ளையன்ன
    யாழேர் மொழியா ளிரவரி
        னும்பகற் சேறியென்று

    வாழே னெனவிருக் கும்வரிக்
        கண்ணியை நீ வருட்டித்
    தாழே னெனவிடைக் கட்சொல்லி
        யேகு தனிவள்ளலே.