271. நல்லாய் நமக்குற்ற தென்னென் றுரைக்கேன் நமர்தொடுத்த வெல்லா நிதியு முடன்விடுப் பான்இமை யோரிறைஞ்சும் மல்லார் கழலழல் வண்ணர்வண் தில்லை தொழார்களல்லாற் செல்லா அழற்கட மின்றுசென் றார்நம் சிறந்தவரே.