பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
468

272

272. அருந்தும் விடமணி யாம்மணி
        கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்
    மருந்து மமிர்தமு மாகுமுன்
        னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
    திருந்துங் கடன்நெறி செல்லுமிவ்
        வாறு சிதைக்குமென்றால்
    வருந்தும் மடநெஞ்ச மேயென்ன
        யாமினி வாழ்வகையே.