பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
473

276

276. வந்தாய் பவரையில் லாமயில்
        முட்டை இளையமந்தி
    பந்தா டிரும்பொழிற் பல்வரை
        நாடன்பண்போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென்
        தில்லை தொழார்குழுப்போற்
    சிந்தா குலமுற்றுப் பற்றின்றி
        நையுந் திருவினர்க்கே.