பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
474

277

277. மொய்யென் பதேஇழை கொண்டவ
        னென்னைத்தன் மொய்கழற்காட்
    செய்யென் பதேசெய் தவன்தில்லைச்
        சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்

    பொய்யென்ப தேகருத் தாயிற்
        புரிகுழற் பொற்றொடியாய்
    மெய்யென்ப தேதுமற் றில்லைகொ
        லாமிவ் வியலிடத்தே.