பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
477

279

279. கருந்தினை யோம்பக் கடவுட்
        பராவி நமர்கலிப்பச்
    சொரிந்தன கொண்மூச் சுரந்ததன்
        பேரரு ளால்தொழும்பிற்
    பரிந்தெனை யாண்டசிற் றம்பலத்
        தான்பரங் குன்றிற்றுன்றி
    விரிந்தன காந்தள் வெருவரல்
        காரென வெள்வளையே.