பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
478

280

280. வென்றவர் முப்புரஞ் சிற்றம்
        பலத்துள்நின் றாடும்வெள்ளிக்
    குன்றவர் குன்றா அருள்தரக்
        கூடினர் நம்மகன்று
    சென்றவர் தூதுகொல் லோஇருந்
        தேமையுஞ் செல்லல்செப்பா
    நின்றவர் தூதுகொல் லோவந்து
        தோன்றும் நிரைவளையே.