282. வேயின மென்தோள் மெலிந்தொளி வாடி விழிபிறிதாய்ப் பாயின மேகலை பண்டையள் அல்லள் பவளச்செவ்வி ஆயின ஈசன் அமரர்க் கமரன்சிற் றம்பலத்தான் சேயின தாட்சியிற் பட்டன ளாம்இத் திருந்திழையே.