பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
483

285

285. குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி
        கூறன்சிற் றம்பலத்தான்
    இயலிதன் றேயென்ன லாகா
        இறைவிறற் சேய்கடவும்
    மயிலிதன் றேகொடி வாரணங்
        காண்கவன் சூர்தடிந்த
    அயிலிதன் றேயிதன் றேநெல்லிற்
        றோன்று மவன்வடிவே.