289. யாயுந் தெறுக அயலவ ரேசுக ஊர்நகுக நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவ லென்னுடைய வாயும் மனமும் பிரியா இறைதில்லை வாழ்த்துநர்போல் தூயன் நினக்குக் கடுஞ்சூள் தருவன் சுடர்க்குழையே.