29. விழியாற் பிணையாம் விளங்கிய லான்மயி லாம்மிழற்று மொழியாற் கிளியாம் முதுவா னவர்தம் முடித்தொகைகள் கழியாக் கழற்றில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன் கொழியாத் திகழும் பொழிற்கெழி லாமெங் குலதெய்வமே.