290. வண்டலுற் றேமெங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர் உண்டலுற் றேமென்று நின்றதொர் போழ்துடை யான்புலியூர்க் கொண்டலுற் றேறுங் கடல்வர எம்முயிர் கொண்டுதந்து கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென் றானொர் கழலவனே.