291. குடிக்கலர் கூறினுங் கூறா வியன்தில்லைக் கூத்தனதாள் முடிக்கல ராக்குமொய் பூந்துறை வற்கு முரிபுருவ வடிக்கலர் வேற்கண்ணி வந்தன சென்றுநம் யாயறியும் படிக்கல ராமிவை யென்நாம் மறைக்கும் பரிசுகளே.