பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
499

297

297. அடற்களி யாவர்க்கு மன்பர்க்
        களிப்பவன் துன்பவின்பம்
    படக்களி யாவண் டறைபொழிற்
        றில்லைப் பரமன்வெற்பிற்
    கடக்களி யானை கடிந்தவர்க்
        கோவன்றி நின்றவர்க்கோ
    விடக்களி யாம்நம் விழுநக
        ரார்க்கும் வியன்முரசே.