298. என்கடைக் கண்ணினும் யான்பிற வேத்தா வகையிரங்கித் தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச் சங்கரன் தாழ்கயிலைக் கொன்கடைக் கண்தரும் யானை கடிந்தார் கொணர்ந்திறுத்தார் முன்கடைக் கண்ணிது காண்வந்து தோன்றும் முழுநிதியே.