299. பிரசந் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார் முரசந் திகழு முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம் அரசம் பலத்துநின் றாடும் பிரானருள் பெற்றவரிற் புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே.