30. குயிலைச் சிலம்படிக் கொம்பினைக் தில்லையெங் கூத்தப்பிரான் கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்குங் கருங்கட்செவ்வாய் மயிலைச் சிலம்பகண்டி யான்போய் வருவன்வண் பூங்கொடிகள் பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறையே.