302. தொண்டின மேவுஞ் சுடர்க்கழ லோன்தில்லைத் தொல்நகரிற் கண்டின மேவுமில் நீயவள் நின்கொழு நன்செழுமென் தண்டின மேவுதிண் தோளவன் யானவள் தற்பணிவோள் வண்டினமேவுங் குழலா ளயல்மன்னும் இவ்வயலே.