பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
509

305

305. சிற்பந் திகழ்தரு திண்மதில்
        தில்லைச்சிற் றம்பலத்துப்
    பொற்பந்தி யன்ன சடையவன்
        பூவணம் அன்னபொன்னின்
    கற்பந்தி வாய்வட மீனுங்
        கடக்கும் படிகடந்தும்
    இற்பந்தி வாயன்றி வைகல்செல்
        லாதவ னீர்ங்களிறே.