307. ஆனந்த வெள்ளத் தழுந்துமொர் ஆருயிர் ஈருருக்கொண் டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும் அம்பலஞ்சேர் ஆனந்த வெள்ளத் தறைகழ லோனருள் பெற்றவரின் ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற் றாதிவ் வணிநலமே.