309. வீதலுற் றார்தலை மாலையன் தில்லைமிக் கோன்கழற்கே காதலுற் றார்நன்மை கல்விசெல் வீதரு மென்பதுகொண் டோதலுற் றாருற் றுணர்தலுற் றார்செல்லல் மல்லழற்கான் போதலுற் றார்நின் புணர்முலை யுற்ற புரவலரே.