312. மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள் வீப்பான் வியன்தில்லை யானரு ளால்விரி நீருலகங் காப்பான் பிரியக் கருதுகின் றார்நமர் கார்க்கயற்கட் பூப்பால் நலமொளி ரும்புரி தாழ்குழற் பூங்கொடியே.