பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
529

319

319. கருப்பினம் மேவும் பொழிற்றில்லை
        மன்னன்கண் ணாரருளால்
    விருப்பினம் மேவச்சென் றார்க்குஞ்சென்
        றல்குங்கொல் வீழ்பனிவாய்

நெருப்பினம் மேய்நெடு மாலெழில்
        தோன்றச்சென் றாங்குநின்ற
    பொருப்பின மேறித் தமியரைப்
        பார்க்கும் புயலினமே.