பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
532

322

322. வாழும் படியொன்றுங் கண்டிலம்
        வாழியிம் மாம்பொழில்தேன்
    சூழும் முகச்சுற்றும் பற்றின
        வால்தொண்டை யங்கனிவாய்

    யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
        றம்பலம் ஆதரியாக்
    கூழின் மலிமனம் போன்றிரு
        ளாநின்ற கோகிலமே.