324. தெளிதரல் காரெனச் சீரனஞ் சிற்றம் பலத்தடியேன் களிதரக் கார்மிடற் றோன்நட மாடக்கண் ணார்முழவந் துளிதரற் காரென ஆர்த்தன ஆர்ப்பத்தொக் குன்குழல்போன் றளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித் தலர்ந்தனவே.