328. சிறப்பிற் றிகழ்சிவன் சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர்தம் பிறப்பிற் றுனைந்து பெருகுக தேர்பிறங் கும்மொளியார் நிறப்பொற் புரிசை மறுகினின் துன்னி மடநடைப்புள் இறப்பிற் றுயின்றுமுற் றத்திரை தேரும் எழில்நகர்க்கே.