பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
540

329

329. அருந்தே ரழிந்தனம் ஆலமென்
        றோல மிடுமிமையோர்
    மருந்தே ரணியம் பலத்தோன்
        மலர்த்தாள் வணங்கலர்போல்
    திருந்தே ரழிந்து பழங்கண்
        தருஞ்செல்வி சீர்நகர்க்கென்
    வருந்தே ரிதன்முன் வழங்கேல்
        முழங்கேல் வளமுகிலே.