337. மூவர்நின் றேத்த முதலவன் ஆடமுப்பத்து மும்மைத் தேவர்சென் றேத்துஞ் சிவன் தில்லை யம்பலஞ் சீர்வழுத்தாப் பாவர்சென் றல்கும் நரக மனைய புனையழற்கான் போவர்நங் காதல ரென்நாம் உரைப்பது பூங்கொடியே.