பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
552

339

339. ஆழியொன் றீரடி யும்மிலன்
        பாகன்முக் கட்டில்லையோன்
    ஊழியொன் றாதன நான்குமைம்
        பூதமும் ஆறொடுங்கும்
ஏழியன் றாழ்கட லும்மெண்
        டிசையுந் திரிந்திளைத்து
    வாழியன் றோஅருக் கன்பெருந்
        தேர்வந்து வைகுவதே.