பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
555

341

341. சேணுந் திகழ்மதிற் சிற்றம்
        பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்
    சூணுந் திருத்து மொருவன்
        திருத்தும் உலகினெல்லாங்
    காணுந் திசைதொறுங் கார்க்கய
        லுஞ்செங் கனியொடுபைம்
    பூணும் புணர்முலை யுங்கொண்டு
        தோன்றுமொர் பூங்கொடியே.