348. அற்படு காட்டில்நின் றாடிசிற் றம்பலத் தான்மிடற்றின் முற்படு நீள்முகி லென்னின்முன் னேல்முது வோர்குழுமி விற்படு வாணுத லாள்செல்லல் தீர்ப்பான் விரைமலர்தூய் நெற்படு வான்பலி செய்தய ராநிற்கும் நீள்நகர்க்கே.