பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
167

35

35. கயலுள வேகம லத்தலர்
        மீது கனிபவளத்
   தயலுள வேமுத்த மொத்த
      நிரையரன் அம்பலத்தின்

இயலுள வேயிணைச் செப்புவெற்
        பாநின தீர்ங்கொடிமேற்
   யலுள வேமலர் சூழ்ந்திருள்
        தூங்கிப் புரள்வனவே.