352. உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரவொருங்கே எடுத்தணி கையே றினவளை யார்ப்ப இளமயிலேர் கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலரம் படுத்தணி வாளிளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே.