36. எயிற்குல மூன்றிருந் தீயெய்த வெய்தவன் தில்லையொத்துக் குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தநிரைத் தயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி அனநடக்கும் மயிற்குலங் கண்டதுண் டேலது வென்னுடை மன்னுயிரே.