363. வந்தான் வயலணி யூர னெனச்சின வாள்மலர்க்கண் செந்தா மரைச்செல்வி சென்றசிற் றம்பல வன்னருளான் முந்தா யினவியன் நோக்கெதிர் நோக்க முகமடுவிற் பைந்தாட் குவளைகள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே.