364. வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்களன்பிற் செல்லிகைப் போதின் எரியுடை யோன்தில்லை அம்பலஞ்சூழ் மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண் டூதவிண் தோய்பிறையோ டெல்லிகைப் போதியல் வேல்வய லூரற் கெதிர்கொண்டதே.