367. மலரைப் பொறாவடி மானுந் தமியள்மன் னன்ஒருவன் பலரைப் பொறாதென் றிழிந்துநின் றாள்பள்ளி காமனெய்த அலரைப் பொறாதன் றழல்விழித் தோனம் பலம்வணங்காக் கலரைப் பொறாச்சிறி யாளென்னை கொல்லோ கருதியதே.