368. வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து வல்லைப் பொலிவொடு வந்தமை யால்நின்று வான்வழுத்துந் தில்லைப் பொலிசிவன் சிற்றம் பலஞ்சிந்தை செய்பவரின் மல்லைப் பொலிவய லூரன்மெய் யேதக்க வாய்மையனே.